×

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் இருந்து மேகதாதுவை நோக்கி விவசாயிகள் பேரணி

ஓசூர்: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் இருந்து மேகதாதுவை நோக்கி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் பேரணியாக புறப்பட்டுள்ளனர். கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அம்மாநில காங்கிரசார் உடனே அணையை கட்டவேண்டும் என்று கூறி பாதயாத்திரை மேற்கொண்டனர். இதனை கண்டிக்கும் வகையில் தமிழகத்தின் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை திருவாரூரில் இருந்து புறப்பட்டனர். திருவாரூரில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் தஞ்சை, நாமக்கல், சேலம் வழியாக தங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு முயற்சி மேற்கொள்வதை தடுக்க வேண்டும். ஒன்றிய அரசு இதற்கு உடந்தையாக செயல்படுகிறது. இதனை கண்டிக்கிறோம் என்பதை வலியுறுத்தி இந்த பேரணியானது நடைபெற்று வருகிறது. ஓசூரில் இருந்து இன்று காலை பி.ஆர் பாண்டியன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக புறப்பட்டு செல்கின்றனர். தொடர்ந்து கர்நாடகாவை நோக்கி கோஷங்களை எழுப்பியவாறு சென்று கொண்டுள்ளனர். இதற்காக பாதுகாப்பு பணிகளை கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேகதாது பகுதியில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு துணை போக கூடாது என்று கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Tags : Hosur ,Megha Dadu ,Karnataka government , megathathu
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு