×

ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடியில் காளையர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்த 200 காளைகள்-களை கட்டிய மாடு விடும் திருவிழா

ஒடுகத்தூர் :  வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடியில் காளையர்கள் மத்தியில் 200 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தோடியது. பார்வையாளர்களின் உற்சாகத்துடன் மாடு விடும் விழா களை கட்டியது.தமிழகத்தில் வடமாவட்டங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து மஞ்சு விரட்டு மற்றும் மாடு விடும் திருவிழா களை கட்டத் தொடங்கியுள்ளது. அரசின் நிபந்தனைகள்படி மாடு விடும் விழாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடியில் நேற்று மாடு விடும் திருவிழா நடந்தது.
இதற்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. விழாவை முன்னிட்டு வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில்  50க்கும் மேற்பட்ட போலீசார்  பலத்த பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்.

அதேபோல், அவசரகால ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவசரகால முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர். தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் சப்- கலெக்டர் ராமகிருஷ்ணன், தாசில்தார் விநாயகமூர்த்தி, ஓஏபி தாசில்தார் விஜயகுமார், மண்டல துணை தாசில்தார் திருகுமரேசன், ஆர்ஐ நந்தகுமார், விஏஓ செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் உறுதிமொழி எடுத்தனர்.

இவ்விழாவிற்கு, சேர்பாடி கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு விழாவை கொடியசைத்து  தொடங்கி வைத்தார். இதையடுத்து மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னர் ஒவ்வொரு காளைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டது. பந்தய தூரத்தின் ஆரம்பப்  புள்ளியில்  இருந்து காளைகள் ஆவிழ்த்து  விடப்பட்டதும் காளையர்கள் மத்தியில் 200 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் கைகளை  தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் மாடுவிடும் விழா களைகட்டியது.

விழாவை காண ஒடுகத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்று ரசித்தனர். இதில் மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விழாவில் இலக்கை குறைந்த நேரத்தில் அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு ₹40 ஆயிரம், 2வது பரிசு ₹35 ஆயிரம், 3வது பரிசு ₹30 ஆயிரம் என்று மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags : Odugathur , Odugathur: At Odugathur next to Vellore district, 200 bulls ran wild among bulls. Of the audience
× RELATED ஒடுகத்தூர் அருகே பைக்கில் சாராயம் கடத்திய வாலிபர் கைது