×

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினால் பொதுமுடக்கம் தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினால் பொதுமுடக்கம் தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மக்கள் நடமாட்டத்திற்கு முழுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பயண தடைகளை விதிப்பது ஆகிய அணுகுமுறைகளால் நோயை கட்டுப்படுத்துவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உயிர்கள் மற்றும் வாழ்வாதாரம் என இரண்டையுமே பாதுகாப்பது அவசியம் என்பதால் தொற்று பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதையை சூழலில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றினாலே பொதுமுடக்கம் தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோட்ரிகோ ஆஃப்ரின் தெரிவித்துள்ளார்.

Tags : World Health Organization , corona
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...