டெலிபிராம்ப்டர் கருவி கூட மோடி பொய்யை ஏற்கவில்லை: ராகுல் காந்தி கிண்டல்

புதுடெல்லி: சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் ஆண்டுதோறும், ‘உலக பொருளாதார மாநாடு’ நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டும் காணொலி மூலமாக நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், பல்வேறு நாட்டு தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இதில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, உரையை பாதியில் திடீரென நிறுத்தினார். பின்னர், மீண்டும் தனது உரையை தொடங்கினார். மோடியின் உரையை திரையில் காட்டும் ‘டெலிபிராம்டர்’ என்ற கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த இடையூறுக்கு காரணம் என்று பாஜ விளக்கம் அளித்துள்ளது. ஆனால், காங்கிரசும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்த கிண்டலடித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால் கூட ஏற்க முடியவில்லை’ என்று கிண்டலடித்துள்ளார். காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘நீங்கள் பேசலாம் ஆனால், டெலிப்ராம்படரை பயன்படுத்தி ஆட்சி செய்ய முடியாது. இதை நாடு புரிந்து கொண்டது,’ என்றார்.

Related Stories: