×

சட்ட விரோத மணல் குவாரி, பண பரிமாற்ற மோசடி பஞ்சாப் முதல்வர் சன்னியின் உறவினர் வீடுகளில் சோதனை: அமலாக்கத் துறை அதிரடி

புதுடெல்லி: பஞ்சாப்பில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 20ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இம்மாநிலத்தில் சில நிறுவனங்களும், தனி நபர்களும் சட்ட விரோத மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக 2018ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் என்று கூறப்படும் பூபிந்தர் சிங் ஹனியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப்பில் சண்டிகர், மொகாலி உள்பட ஹனிக்கு சொந்தமான 12 இடங்களில் உள்ள அலுவலகம், வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று இந்த வழக்கு தொடர்பாக திடீர் சோதனை மேற்கொண்டனர். இது குறித்து பஞ்சாப் முதல்வர் சன்னி கூறுகையில், ‘‘பஞ்சாப்பில் தேர்தல் நெருங்குவதால் காங்கிரசுக்கும், அதன் தலைவர்களுக்கும் அழுத்தம் தருவதற்காக அமலாக்கத் துறையை ஏவி ஒன்றிய அரசு மிரட்டுகிறது . மேற்குவங்க தேர்தலின் போதும் இப்படி தான் நடந்தது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இதை எப்படி கடந்து வர வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். 2018ம் ஆண்டு நான் முதல்வராக இல்ைல. இதில் எனக்கு எப்படி தொடர்பு இருக்கும்? இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை,’ என தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

* கெஜ்ரிவால் கேள்வி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘முதல்வர் சன்னி அமைச்சரவையில் உள்ளவர்கள் சட்ட விரோத மணல் குவாரி நடத்துகின்றனர். இவர்களுக்கு முதல்வர் சன்னியும் ஆதரவளிக்கிறார் என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறோம். இவர்களை முதல்வர் ஏன் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றவில்லை?’ என்று கேள்வி எழுப்பினார்.

Tags : Punjab ,Chief Minister ,Sunny ,Enforcement , Illegal sand quarrying, money laundering scam raids Punjab Chief Minister Sunny's relatives' houses: Enforcement department takes action
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து