ஷாருக்கான், சல்மான்கான் படப்பிடிப்பு நிறுத்தம்

மும்பை: ஷாருக்கான், சல்மான்கான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மகாராஷ்டிராவிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஷாருக்கான் நடிக்கும் பதான், சல்மான்கான் நடிக்கும் டைகர் 3 ஆகிய படங்களை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது, ஓரிருவருக்கு கொரோனா தொற்று இருந்தது. தற்போது கொரோனாவுடன் ஒமிக்ரான் பரவி வருவதால், இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்க யஷ்ராஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று படப்பிடிப்பில் பலருக்கும் பரவினால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக பட வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Stories: