ஆஸ்கர் யூடியூப் சேனலில் ஜெய்பீம்

லாஸ்ஏஞ்சல்: ஆஸ்கர் விருது குழுவின் யூடியூப் சேனலில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் இடம்பிடித்துள்ளது. சூர்யா, லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த படம், ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கினார். தற்போது ஆஸ்கர் அமைப்பு இந்த படத்துக்கு சிறந்த கவுரவத்தை அளித்துள்ளது. ஆஸ்கர் அமைப்பு தன்னுடைய யூடியூப் சேனலில் ஜெய்பீம் படத்தின் காட்சிகளை பகிர்ந்து இருக்கிறது. இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி, இந்திய சினிமாவுக்கே கிடைத்த கவுரவமாக கருதப்படுவதாக திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பழங்குடியின பெண்ணின் சட்டப் போராட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படம், நிஜ சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: