விண்வெளியில் இளையராஜா இசை அமைத்த பாடல்: தமிழக மாணவர்கள் ஏற்பாடு

சென்னை: எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த குறிப்பிட்ட மாணவர்கள் குழுவினர், இந்த ஆண்டு மற்றொரு எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்து உள்ளனர். இதில் இளையராஜா இசை அமைத்த இந்தி பாடல் ஒன்று இடம்பெற உள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசை அமைத்துள்ள பாடல் இடம்பெறும் சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்ப இந்த மாணவர்கள் குழு ஏற்பாடு செய்திருக்கிறது. இது தொடர்பாக இளையராஜா தரப்பில் கூறும்போது, ‘கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும், இனி வரும் காலங்களில் இந்த பாரதம் முன்னணி தேசமாக இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கும் இந்தி பாடலை  சுவானந்த் கிர்கிரே எழுதியுள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார்’ என்றனர். இந்த பாடலை தமிழிலும் வெளியிட இளையராஜா திட்டமிட்டு இருக்கிறார்.

Related Stories: