வாழப்பாடி ராமமூர்த்தி படத்திற்கு காங்கிரசார் மரியாதை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான வாழப்பாடி கூ.ராமமூர்த்தியின் 82வது பிறந்தநாள் விழா சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.அப்போது, வாழப்பாடி ராமமூர்த்தி உருவப் படத்திற்கு மாநில துணைத் தலைவர்கள் வாழப்பாடி ராமசுகந்தன், பொன் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காங்கிரசார் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்கள் பி.வி.தமிழ்செல்வன், இல.பாஸ்கரன், எஸ்.ஏ.வாசு, சேவாதள மாநில தலைவர் குங்ஃபூ விஜயன், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், நாஞ்சில் பிரசாத், மாநில செயலாளர்கள் அகரம் கோபி, சுரேஷ் பாபு, கடல் தமிழ்வாணன், சூளை கே.ராஜேந்திரன், ஆர்.டி.ஐ. பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: