×

குடியரசு தினவிழாவை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலையில் 4 நாள் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: குடியரசு தின விழா வருகிற 26ம் தேதி காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகில் கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு ஜனவரி 26 மற்றும் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் நாட்களான ஜனவரி 20, 22 மற்றும் 24ம் தேதி ஆகிய     4 தினங்களுக்கு போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தினங்களில் காமராஜர் சாலையில், கலங்கரைவிளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது (சுமார் 9.30 மணி). அடையாறு டூ பிராட்வே மார்க்கம்: சரக்கு வாகனங்கள்:  சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, வி.கே. ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை  அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

பஸ், கார், பைக்: பிற வாகனங்கள், மாநகர பேருந்துகள், சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். அவைகள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை சந்திப்பு, நீல்கிரிஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம். 27 டி பஸ் மார்க்கம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் மாநகர பேருந்து தடம் எண் 27டி ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம்.தெரு சந்திப்பில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு, அவை வி.எம்.தெரு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்கு கெனால் பேங்க் ரோடு, சீனிவாசபுரம் வழியாக பட்டினப்பாக்கம் சென்றடையலாம்.

21 ஜி பஸ் மார்க்கம்:  மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் எண் 21ஜி ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி விடப்பட்டு, அவை ராயப்பேட்டை மேம்பாலம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.45பி, 12 ஜி பஸ் மார்க்கம்: மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணா சதுக்கம் நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் எண் 45பி மற்றும் 12ஜி ஆகியவை நீல்கிரிஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கம் சென்றடையலாம். ஆர்கே சாலை டூ காந்தி சிலை : டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பில் டாக்டர் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும். டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும். டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.

பெல்ஸ் சாலை மார்க்கம்: பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். மாநகர பேருந்துகள் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படும். அண்ணா சதுக்கம் பஸ் நிலையம் மாற்றம்: அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும்.

பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, அண்ணா சாலை, ஜீ.பி.ரோடு, ராயப்பேட்டை மணிக்கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜீ.ஆர்.எச். ராயப்பேட்டை ஒன் பாயிண்ட், நடேசன் சாலை, காரணீஸ்வரர் பகோடா தெரு, சாந்தோம் சாலை, வழியாக அடையாறு சென்றடையலாம். வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Marina Kamaraj Road ,Republic Day , On the eve of Republic Day On Marina Kamaraj Road 4 day traffic change: Police notice
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!