தைப்பூசத் திருநாள் ராமதாஸ் வாழ்த்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவு: தை மாத பூச நட்சத்திரமும் முழுநிலா பருவமும் ஒன்றாக வரும் திருநாள் தைப்பூசம். உலகெங்கும் வாழும் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாளாகவும் தைப்பூசம் உள்ளது. தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தமிழீழம், தென் ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் தமிழர்கள் தைப்பூசம் திருநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த நன்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: