பூச்சு வேலைக்கு எம்சாண்ட் பயன்படுத்துவது எப்படி?: கையேடு வெளியிட்டது பொதுப்பணித்துறை

சென்னை: தரமான எம்சாண்ட் பயன்படுத்தி பூச்சு வேலை செய்வதற்கான எளிய நடைமுறை குறித்த கையேட்டினை பொதுப்பணித்துறை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆற்று மணலுக்கு மாற்றாக எம்சாண்ட் பயன்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், ஒரிஜினல் எம்சாண்ட் குவாரியில் மணல் எங்கு கிடைக்கும் என்பது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இந்தநிலையில் பொதுப்பணித்துறை வேலூர் கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம் தரமான எம்சாண்ட் பயன்படுத்தி பூச்சு வேலை செய்வதற்கான எளிய நடைமுறைகள் குறித்து கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  கையேட்டில் கூறியிருப்பதாவது:   எம் சாண்ட் பயன்படுத்தி பூச்சு வேலை தொடங்குவதற்கு முன் குறைந்தபட்சம் 7 மற்றும் 10 நாட்களாவது செங்கல் கட்டுமானம் கியூரிங் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டிட வேலையின்போது வைக்கப்பட்ட தாங்கு மூட்டு கோலுக்கான துளைகள் அடைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பூச்சு வேலை தொடங்குவதற்கு முன்பு செங்கல் கட்டுமான பரப்பினை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

 பூச்சு வேலை நடைபெறும் போது செங்கல் மற்றும் எம்சாண்ட் உலர் கலவை தேவையான விகிதாச்சாரப்படி அளவு பெட்டியை பயன்படுத்தி நன்கு கலக்கி தயாரிக்க வேண்டும்.  கலவைக்கேற்ப கிடைக்கும்  பிளாஸ்டிக்சைசர் கெமிக்கலை தண்ணீரில் கலந்து கரைசலாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கரைசலை ஏற்கனவே  கலந்து வைத்துள்ள உலர் கலவையில் வேலை பக்குவத்திற்கு ஏற்ப நன்றாக கலக்கவேண்டும்.  30 நிமிடத்திற்குள் கலந்த கலவையை பயன்படுத்த வேண்டும். பூச்சுக்கனம் முறையாக அருக்க பூச்சுகளின் மேற்பரப்பில் பில்லைகளை 1 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும். சீரான இடைவெளியில் பூச்சு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அளவுள்ள கலவை பூச்சுகளை செங்கல் கட்டிடத்தின் மேற்பரப்பில்  சுமார் 2 மீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். பூச்சு கரண்டி மூலம் முதல் சிமெண்ட் பூச்சு வேலையை அழுத்தமாக மேற்கொள்ளவேண்டும்.

  பூசப்பட்ட சுவர் மீது ஏழு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தண்ணீர் பீச்சி அடிக்க வேண்டும். எம் சாண்ட் குவியலில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து உற்று நோக்க வேண்டும். அப்போது அது அவல் வடிவில் இருந்தால் விஎஸ்ஐ  எனப்படும் இயந்திர மூலம் தயாரிக்கப்பட்ட ஒரிஜினல் மணல் இல்லை என்பதை நாம் முடிவு செய்யலாம். செல்போன் கொண்டு எம்சாண்ட் மணலை போட்டோ எடுத்து ஜூம் செய்து பார்த்தால் கியூபிகல் வடிவ துகள்களாக இருந்தால் ஒரிஜினல் எம்சாண்ட். ஒரிஜினல் எம்சாண்டில் காக்கா-பொன் துகள்கள் அதிகமாக இருக்கக்கூடாது. குவாரி தூசு (டஸ்ட்) அதிகமாக உள்ளதா என்பதை கையில் வைத்து தேய்த்து  துகள்களின் அளவை வைத்து பார்ப்பதன் மூலம் கண்டுபிடிக்கலாம். 75 மைக்ரானுக்கு குறைவாக உள்ள முன்பு தண்ணீரில் கழுவதன் மூலம் மதிப்பிடப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: