மகாராஷ்டிரா மும்பையில் கடற்படை கப்பல் ரன்வீரில் ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிரா மும்பையில் கடற்படை கப்பல் ரன்வீரில் ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். மும்பை கப்பல் துறைமுகத்தில் இருந்த ஐ.என்.எஸ். ரன்வீர் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு கடற்படையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கப்பலின் உள் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டது. ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கப்பல் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 3 பேர் வீரர்கள் உயிரிழந்ததாகவும் 11 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் வெடிவிபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் இந்திய கடற்படையில் முக்கிய கப்பல்களில் ஒன்றாகும். ரன்வீர் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் 1986-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: