டி.ஆர்.பி.ராஜா, எம்.எம். அப்துல்லாவுக்கு புதிய பொறுப்புகள்: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு. பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், அரசுப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக, திமுக தலைவர் அவர்களிடம் கொடுத்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு, அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, கழக சட்டதிட்ட விதி: 31 - பிரிவு: 19-ன் படி அவருக்கு பதிலாக கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக திரு. டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ., (எண். 1202, 6வது அவென்யூ, ‘இசட்’ பிளாக், அண்ணா நகர், சென்னை - 600 040.) அவர்கள் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

அயலக அணிச் செயலாளர் நியமனம்

அயலக அணிச் செயலாளராக பணியாற்றி வந்த திரு.டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ., அவர்கள் கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதால், கழக சட்டதிட்ட விதி: 31 - பிரிவு: 20-ன் படி அவருக்கு பதிலாக, மாநிலங்களவை உறுப்பினர் திரு. எம்.எம்.அப்துல்லா, எம்.பி.ஏ. , அவர்கள் (ரயில்வே ஸ்டேசன் ரோடு, ராஜகோபாலபுரம் அஞ்சல், புதுக்கோட்டை - 622 003.) அயலக அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

Related Stories: