×

மருதமலையில் தைப்பூசம் கோலாகலம்: அனுமதி மறுப்பால் பக்தர்கள் ஏமாற்றம்

தொண்டாமுத்தூர்: மருதமலையில் தைப்பூசம் கோலாகலமாக நடந்தது. சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அனுமதி மறுப்பால் அவர்கள்  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கொரோனா வரைஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 14ம் தேதி முதல் இன்று (18ம் தேதி) வரை கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்ரமணியசுவாமி கோயிலில் இன்று தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தைப்பூச விழா நடந்தது.

உற்சவர் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் கோயில் மூலமாக நடத்தப்பட்டது. வழக்கமாக தைப்பூசத் திருவிழாவின்போது கோவை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி எடுத்து கோயிலுக்கு பாதயாத்திரையாக வருவர். மேலும் அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், பல்லடம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் வருவதுண்டு. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

நாளை (புதன்), நாளை மறுநாள் (வியாழன்) வழக்கம்போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள், மலை அடிவாரத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Tags : Thaipusam ,Marudhamalai , Thaipusam riots in Marudhamalai: Devotees disappointed by denial of permission
× RELATED தமிழக கோவில்களும் வழிபாடு முறைகளும்!!!