போலியோ சொட்டு மருந்து முகாம் கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம்: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் இந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும். இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து அனைவர்க்கும் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒன்றிய அரசு கொடுத்துள்ள விதிமுறைகளின் படி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று தற்போது தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கோவிட் பாதுகாப்பு காரணங்களுக்காக போலியோ சொட்டு மருந்து போடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்போது கோவிட் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினசரி 23,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் உறுதியாகி வருகிறது. ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது, போலியோ சொட்டுமருந்து பணிகளுக்கு செல்வது சுகாதார பணியாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். குழந்தைகளை போலியோ சொட்டுமருந்து போடும் இடத்திற்கு அழைத்து வருவதும், ஏற்கனவேற் கோவிட் பரவல் அதிகமாகி கொண்டு வருவதால் குழந்தைகளுக்கும் பரவுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இதனை தவிர்க்க போலியோ சொட்டு மருந்து போடும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை கொடுத்துள்ள வழிகாட்டுதலின் படி தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளனர். பிப்ரவரி கடைசி வாரத்தில் கொரோனா பரவல் குறைந்துவிடும் என்று பொது சுகாதாரத்துறை வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories: