அகமதாபாத் அணியில் ஹர்திக், ரஷித்கான், கில்

மும்பை: 15வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் புதிதாக இணைந்துள்ள லக்னோ, அகமதாபாத் அணிகள் ஏலத்திற்கு முன் 3 வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அகமதாபாத் அணி ஹர்த்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதே தொகைக்கு ரஷீத்கானையும் இழுத்துள்ளது.

ரஷித்கானிடம் லக்னோ ரூ.11 கோடிக்கு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அகமதாபாத் ரூ.4 கோடி அதிகமாக ஆசை காட்டி ஒப்பந்தம் செய்துள்ளது. 3வது வீரராக சுப்மான்கில்லை ரூ.7 கோடிக்கு பெற்றுள்ளது. மொத்த ஏல தொகை ரூ.90 கோடியாக உள்ள நிலையில், அகமதாபாத் மீதமுள்ள ரூ.53 கோடியில் பொது ஏலத்தில் பங்கேற்கும்.

Related Stories: