×

ராஜஸ்தானில் டிராக் சைக்கிள் போட்டி புதியம்புத்தூர் மாணவி முதலிடம் : ஆசிய போட்டிக்கு தகுதி

ஓட்டப்பிடாரம் :  ராஜஸ்தானில் நடந்த இந்திய டிராக் சைக்கிள் போட்டியில் புதியம்புத்தூர் பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார். இதன்மூலம் ஆசிய தடகள போட்டிக்கு தகுதி பெற்றார்.ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமண்  கிராமத்தை சேர்ந்தவர் சேசையா மகள்  ஸ்ரீமதி. இவர், ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மதி டிராக் சைக்கிள் போட்டியில்  மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டி

களில் முதலிடம் பிடித்துள்ளார். சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக கனிமொழி எம்பியின் உதவியை நாடினார். உடனடியாக கனிமொழி எம்பியும் ரூ.5.50 லட்சத்தில் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். இதையடுத்து கடந்தாண்டு டிச.24ம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற இந்திய  அளவிலான டிராக் சைக்கிள் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ மதி, குழு பிரிவில்  முதலிடம் பெற்று  தங்கப்பதக்கமும், தனித்திறன் பிரிவில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கமும் வென்றார்.

 இதன் மூலம் ஸ்ரீமதி ஆசிய தடகளப் போட்டிக்கு தகுதி  பெற்று புதுடெல்லியில் உள்ள சாய் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். தேசிய போட்டியில் பதக்கம் வென்றுள்ள ஸ்ரீமதியை கிராம மக்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags : Puthiyambuthur ,Rajasthan ,Asian Championship , Ottapidaram,Cycling, Track Cycling, Srimathi
× RELATED லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து...