கொடைக்கானலில் அழியும் நிலையில் 500 ஆண்டு மரம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ளது பாம்பார்புரம். இங்குள்ள வனப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று உள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மரத்தின் அழகையும், தொன்மையையும் கண்டு வியந்து வருகின்றனர். சமீபகாலமாக இந்த மரம் உள்ள பகுதியும், இந்த மரமும் பராமரிப்பின்றி சுற்றுலா பயணிகள் காண்பதற்கு வழியில்லாமல் உள்ளது. எனவே வனத்துறையினர் அழியும் நிலையில் உள்ள இம்மரத்தை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: