முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு ஆய்வுக்கூட்டம்

சென்னை: மாநில திட்டக்குழுவின் ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. வரும் மார்ச் மாதம் தமிழகத்தில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் என்ன மாதிரியான திட்டங்கள் இடம்பெறுவது குறித்தும் பல்வேறு விசயங்கள் குறித்தும் முதலமைச்சர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டக்குழுவின் துணைத்தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் இருக்கிறார். பேராசிரியர்கள் ராம சீனிவாசன் உள்ளிட்ட உறுப்பினர்கள், பொருளாதார வல்லுநர்கள் சுல்தான் அகமது இஸ்மாயில் சுற்றுச்சூழல் ஆர்வலர், முன்னாள் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபங்கு, சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா, மல்லிகா சீனிவாசன், மருத்துவர்கள் சிவராமன் உள்ளிட்டோர் உள்ள இந்த மாநில திட்டக்குழு அவ்வப்போது கூடி மாநிலத்தில் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். தமிழகத்தின் நிதிநிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை மீட்பதற்கான வழிமுறைகள், தொழில் வளர்ச்சிகள் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்படும்.

நேற்று முதலமைச்சரோடு ஜெயரஞ்சன் சந்தித்து பேசினார். சுரேஷ் சம்பந்தன் உள்ளிட்ட வளரும் தொழில் முனைவோர்களாக இருக்கக்கூடியவர்கள் தமிழகத்தில் புத்தாக்க நிறுவனம் (startup) ஒரு நிறுவனமே ஏற்படுத்தியுள்ளனர். புதிய startup நிறுவனங்கள் வருவதற்கு அரசு நிதி ஒதுக்கி தொழில் வாய்ப்பை ஏற்படுத்துகின்றனர். இதுகுறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த திட்டக்குழுவிற்கான பணி நெறிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த திட்டக்குழு 1971ல் கலைஞர் இருக்கும் போது கொண்டுவரப்பட்டது. இந்த திட்டக்குழுவிற்கு தலைவராக முதலமைச்சர் இருக்கிறார். ஏற்கனவே தலைமை செயலகத்தில் 2 முறை இந்த கூட்டத்தை முதலமைச்சர் நடத்தியுள்ளார். இன்று எழிலகத்தில் உள்ள திட்டக்குழு அலுவலகத்திற்கு முதலமைச்சர் வந்துள்ளார். இந்த திட்டக்குழு அலுவலகத்தில் ஏற்கனவே பல்வேறு அமைச்சர்கள் இங்கு ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமன் உள்ளிட்டோர் ஆலோசகர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: