குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டு அரசின் அலங்கார ஊர்தி புறக்கணிப்புக்கு முத்தரசன் கண்டனம்..!!

குமரி: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டு அரசின் அலங்கார ஊர்தி புறக்கணிப்புக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் ஊர்தி புறக்கணிக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதல்ல என்று கண்டனம் தெரிவித்தார். பாரதியார் உள்பட தலைவர்கள் பற்றி வெளிநாட்டினருக்கு தெரியாது என ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறிய பதில் கண்டிக்கத்தக்கது என்றும் முத்தரசன் குறிப்பிட்டார்.

Related Stories: