சித்துவின் ஒட்டுமொத்த முதல்வர் கனவை சிதைத்து போட்டது காங்கிரஸ் :சரண்ஜித் சன்னியை முதல்வர் வேட்பாளராக சூசகமாக அறிவித்தது!!

சண்டிகர் : பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை மறைமுகமாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் 20ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேர்வில் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் குறும்படம் ஒன்றில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சூசகமாக தெரிவித்து இருக்கிறது. முதல்வர் பணியை சரியாக செய்பவரை வேட்பாளராக அறிவிக்கும் தேவை இல்லை என்று சோனு சூட் பேசிய வசனத்தை சரண்ஜித் சிங் சன்னியை கொண்டு வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.வகுப்பறையில் கடைசி இருக்கையில் இருக்கும் மாணவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தால் அவரால் நாட்டையே மாற்ற முடியும் என்று அந்த வீடியோவில் சோனு சூட் பேசி இருந்தார். இதனை தொடர்ந்து சரண்ஜித் சிங் சன்னியை ஹீரோவாக காட்டும் வகையில் வீடியோ அமைந்துள்ளது. இதனால் மூலம் பஞ்சாபில் முதல்வர் வேட்பாளராக சன்னியை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து இருப்பது சூசகமாக தெரியவந்துள்ளது.

Related Stories: