அரசு கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்க ஆய்வு

தொண்டி :  கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்படும் நபர்களை தனிமை படுத்தி சிகிச்சை அளிக்க கொரோனா வார்டு அமைப்பதற்காக திருவாடானை அரசு கலை கல்லூரியை நேற்று ஆர்டிஓ ஆய்வு செய்தார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கடந்த சில நாள்களாக நோய் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.

இதற்காக திருவாடானை அரசு கல்லூரி பரிசீலிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இங்கு கொரோனா வார்டு அமைக்கப்பட்டது குறிப்பிடதக்கது. இதனடிப்படையில் நேற்று கல்லூரி வளாகத்தை கோட்டாச்சியர் சேக் மன்சூர் பார்வையிட்டார். கொரோனா நோயாளிகள் தனிமை படுத்தி சிகிச்சை அளிக்க போதிய இடவசதி உள்ளதா மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தாசில்தார் செந்தில்வேல் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் இலக்கியா ராமு, ஆர்.ஐ. மெய்யப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: