×

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கான தேர்தலில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கீடு

சென்னை: சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கான தேர்தலில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 32 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கும், 16 வார்டுகள் பட்டியலின பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 84 வார்டுகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட வார்டுகளில் பெண்கள் போட்டியிடக்கூடிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. சில வார்டுகள் பொது பிரிவில் உள்ளதால் அங்கும் பெண்கள் நிற்கப்பட வாய்ப்புள்ளது. பெண்களின் பங்களிப்பு சென்னை மாநகராட்சியில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 16 வார்டில் ஒருவர் தான் மேயராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்த 16 தொகுதிகளில் நிற்கவைக்கப்படும் நபர்களை பொறுத்து யார் மேயராக வர வாய்ப்புள்ளது என்று தெரியவரும். எனவே இந்த 16 பேரில் ஒருவர் தான் சென்னை மாநகராட்சியின் மேயராக வர உள்ளார்.

ஏற்கனவே வார்டு வரையறைகள் செய்யப்பட்டு தயாராக உள்ளது. ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் இடஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது. அதைவைத்து அந்தந்த கட்சிகள் தேர்தல் தேதி அறிவிக்கும் பட்சத்தில் வேட்பாளர் தேர்வு வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Chennai Municipality , Corporation of Chennai
× RELATED மக்களவைத் தேர்தலையோட்டி காவலர்கள்...