ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்தார் நடிகர் தனுஷ்: சமூக வளைதலங்களில் இருவரும் வெளியிட்டதால் பரபரப்பு

சென்னை: நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்து சென்றார். இது தொடர்பான தகவலை இருவரும் சமூக வளைதலத்தில் வெளியிட்டனர். இதுகுறித்து நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: ‘‘18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்” என்று தெரிவித்துள்ளார். தனுஷ் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: