எம்ஜிஆர் பிறந்த நாள் விழா: எம்எல்ஏ பங்கேற்பு

மதுராந்தகம்: எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் மாமண்டூரில் உள்ள அவரது சிலைக்கு, மதுராந்தகம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அப்பாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் கீதா கார்த்திகேயன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் குமரவேல், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நகர செயலாளர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தனர். தண்டரை புதுச்சேரி ஊராட்சியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் விவேகானந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ரவுண்டானா அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளர் கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர்  சத்தியா, ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வரதராஜன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பழனி, அதிமுக நிர்வாகி மார்க்கெட் அரிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பும், எம்ஜிஆர் படத்திற்கு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஆயிரம்  பேருக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து முத்தியால்பேட்டை, களியனூர் கிராம மக்களுக்கு தென்னை மரக்கன்றுகளை வழங்கினார்.

Related Stories: