எம்ஜிஆர் பிறந்தநாள் விழா ஏழை எளியோருக்கு அன்னதானம்

திருவள்ளூர்: எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற்ற விழாவிற்கு அதிமுக மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.நேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா எம்ஜிஆர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு ஏழை, எளியவர்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் நிர்வாகிகள் பூபதி, எம்.நரேஷ்குமார, விஜயதேவி பாபு, வெங்கடேசன், வக்கீல் பா.செந்தில்குமார், ஆ.செல்வம், சங்கர், கோவிந்தராஜ், ஜெயச்சந்திரன், செந்தில்குமார், சீனிவாசன், மஞ்சுளா ஏழுமலை, லட்சுமி, அண்ணாதுரை, ராகவன், வளையாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி ஒன்றியம் காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் காட்டுப்பாக்கம் ஜிதிருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் கேஜிடி.கவுதமன், மாவட்ட பேரவை செயலாளர் க.வைத்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, தனசேகரன், உமாசந்திரன், மணவாளன், ஊராட்சி தலைவர் ஷீலா சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூந்தமல்லி நகர அதிமுக செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ இரா.மணிமாறன் எம்ஜிஆர் படத்திற்கு மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் சி.ஒய்.ஜாவித் அகமது, பூவை ஞானம், சார்லஸ், அந்தமான் முருகன், தேவேந்திரன், நடராஜன், ராஜேஸ்வரி, ரோஸி டீச்சர், நேமம் உ.ரகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மகேந்திரன் தலைமையில், வடமதுரை ஊராட்சி அரசு பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு எல்லாபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் அம்மினி மகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினர். இதில் கிளை செயலாளர்கள் சீனு, ராமதாஸ், நிர்வாகிகள் மாவட்ட அம்மா பேரவை தலைவர் ராஜீவ்காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊத்துக்கோட்டை பேரூர் அதிமுக  சார்பில் பேரூர் செயலாளர் ஷேக்தாவுத் தலைமையில் நிர்வாகிகள், முன்னாள் பேரூர் செயலாளர் ராசமாணிக்கம் உள்ளிட்டோரும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.

Related Stories: