தங்கமணி, வேலுமணி உட்பட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜியுடன் சந்திப்பு: சிவகாசியில் திடீர் பரபரப்பு

சிவகாசி: சிவகாசி அருகே ராஜேந்திரபாலாஜியை அவரது வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஆவின் மற்றும் அரசுத்துறையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியான அவர், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். நேற்று எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி வீட்டில் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, உதயகுமார், சி.வி.சண்முகம், மாபா பாண்டியராஜன் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், மேலூர் முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் ஆகியோர் திடீரென ராஜேந்திரபாலாஜியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு அவரது வீட்டில் சுமார் ஒன்றரை மணிநேரம் நடந்தது. இந்த சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: