×

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஒசாகா, சக்காரி, எலினா முதல் சுற்றில் வெற்றி

மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் இன்று அதிகாலை தொடங்கியது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில், 5ம் நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி, 6-4, 7-6 என்ற செட் கணக்கில், ஜெர்மனியின் தட்ஜானாவை வீழ்த்தினார். ஸ்விட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், 6-4, 6-3 என பிரான்சின் கிறிஸ்டினாவையும், உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-1, 7-6 என பிரான்சின் பியோனாவையும்,

இத்தாலியின் கமிலா ஜியோர்ஜி, 6-4, 6-0 என ரஷ்யாவின் அனஸ்தேசியாவையும் வீழ்த்தினர். நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கொலம்பியாவின் கமிலா ஒசோரியோவை எளிதாக வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். 19 வயதான சீனாவின் கின்வென்ஜெய், 6-3, 1-6, 7-10 என பெலாரசின் அலியாக் சாண்ட்ராவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

Tags : Australian Open Tennis ,Osaka ,Zachary ,Elena , Australian Open Tennis: Osaka, Zachary, Elena win first round
× RELATED கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி