×

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை போட்டியாகக் கருதாமல், விளையாட்டாகவே கருத வேண்டும் :விலங்குகள் நல வாரிய உறுப்பினர்

மதுரை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை போட்டியாகக் கருதாமல், விளையாட்டாகவே கருத வேண்டும் என்று விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் தெரிவித்துள்ளார். உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.இதில் விலங்குகள் நல வாரியத்தின் பார்வையாளராக வாரிய உறுப்பினர் மிட்டல் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மிட்டல் கூறியதாவது:தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடத்துவது அவர்களுடைய பாரம்பரியத்தைக் காட்டுகிறது. இதைப் போட்டியாக நினைக்கக் கூடாது. பாரம்பரிய விளையாட்டாகக் கருத வேண்டும்.மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 5 ஆண்டுகளாகப் பார்வையாளராகப் பங்கேற்று வருகிறேன். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவுக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படிதமிழக அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதை நான் வரவேற்கிறேன்,என்றார். .

Tags : Tamils ,Animal Welfare Board , விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல்
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்