பிரபல இசையமைப்பாளர் கொரோனாவால் மரணம்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவின் பழம்பெரும் இசையமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத் (73). 1973ம் ஆண்டு ‘ஜீசஸ்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின்னர் 100க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்து உள்ளார். சினிமா தவிர 42 நாடகங்களையும், 25 நடன நாடகங்களையும் எழுதி இயக்கி உள்ளார். இவருக்கு கடந்த 14ம் தேதி கேரள அரசின் ஹரிவராசனம் விருது சபரிமலையில் வைத்து வழங்கப்பட்டது.

அதன்பின் ஊர் திரும்பியவர், ரத்த அழுத்தம் காரணமாக கோட்டயத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி ஆலப்பி ரங்கநாத் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு கேரள திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: