தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும்,நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.குறிப்பாக,சென்னையில் இன்றும் நாளையும் என 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,திருவள்ளூர் மாவட்டதில் இன்று ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இன்றும்,நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

Related Stories: