×

காங்கிரசை தொடர்ந்து பஞ்சாப் தேர்தலை ஒத்திவைக்க பாஜ., சிரோன்மணி கோரிக்கை

அமிர்தசரஸ் : உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரையில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. உபி.யில் 7 கட்டங்களாகவும், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவாவில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், பஞ்சாப்பில் பிப்ரவரி 16ம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தேர்தலை குறைந்தப்பட்சம் 6 நாட்களாவது ஒத்திவைக்கும்படி இம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் ( காங்கிரஸ்), பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

 இந்நிலையில், பாஜ.வும் அதன் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளமும் (சம்யுக்த் பிரிவு) நேற்று இதே கோரிக்கை வலியுறுத்தின.


Tags : Punjab elections ,Congress ,Sironmani , Punjab Elections, Date Change, Request, election commission
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...