×

தனியாக கூடுதல் கட்டணம் கிடையாது மின்சார வாகனங்களுக்கு இனி வீட்டிலேயே சார்ஜ் ஏற்றலாம் : ஒன்றிய அரசு புதிய சலுகை

புதுடெல்லி : மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, இனி அவற்றை வீடு, அலுவலகங்களிலேயே சார்ஜ் செய்து கொள்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதாலும் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

பொதுமக்களும் மின்சார வாகனங்களை அதிகளவில் வாங்கத் தொடங்கி உள்ளனர். இதனால், ஏராளமான மோட்டார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய மின்சார வாகனங்களை களமிறக்கி வருகின்றன. இந்நிலையில், மின்சார வாகன பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசு பல்வேறு சலுகைகளை அளித்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: * பொதுமக்கள் தங்களின் மின்சார வாகனங்களை வீடு அல்லது அலுவலகங்களில் உள்ள மின் இணைப்பை பயன்படுத்தி சார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்கு கூடுதல் கட்டணம் கிடையாது.

* எந்த ஒரு தனிநபரும், நிறுவனமும் பொது சார்ஜிங் நிலையங்களை அமைக்க உரிமம் பெறத் தேவையில்லை. அதே சமயம், சார்ஜிங் நிலையங்களுக்கான தொழில்நுட்பம், பாதுகாப்பு, மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் செயல்திறன் தரநிலைகள் உள்ளிட்ட நெறிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
* பொது சார்ஜிங் நிலையங்களை லாபகரமானதாக மாற்ற, வருவாய் பகிர்வு திட்டமும் கொண்டு வரப்படும்.

இதன்படி, அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் உள்ள இடங்கள் பொது சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஏலம் மூலமாக அனுமதி வழங்கப்படும். இதற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.1 என்ற அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் இதுபோன்ற சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

Tags : U.S. government , Electirc Cars, Chargers, Central Government, electric vehicles
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...