வல்லூர் அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு, 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை காரணமாக மின் தேவை குறைந்துள்ளதால், வல்லூர் அனல் மின் நிலைய 3வது அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மின் தேவை அதிகரித்ததும் மீண்டும் அந்த அலகில் உற்பத்தி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: