×

அலங்காநல்லூரில் இன்று அனல்பறக்கும் ஜல்லிக்கட்டு : 700 காளைகள், 300 வீரர்களுக்கு அனுமதி

அலங்காநல்லூர் : உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது.  உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 17) நடக்கிறது. காலை 7 மணியளவில் அலங்காநல்லூர் கோட்டை  முனிசாமி வாடிவாசல் திடலில் போட்டி துவங்குகிறது. இதற்காக 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம்  பதிவு செய்து அனுமதி பெற்றுள்ளனர்.

சிறந்த காளைக்கு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் சிறந்த  மாடுபிடி வீரருக்கு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்  சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘‘‘‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 400 ஆண்டுகள் பழமையானது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில், வாடிவாசலில் இருந்து காளையின் திமிலை பிடித்தபடி சுமார் 50 அடிக்குள் அருகிலிருக்கிற மாரியம்மன் கோயில் வரை விழாமல் சென்றாலே வெற்றிதான். கொரோனா தொற்றுக் காலம் என்பதால் 300 வீரர்கள், 700 காளைகளுடன், 150 பார்வையாளர்கள் என அரசு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. பாரம்பரியம் பேணி, நாட்டு மாடுகள் இனம் காக்க தமிழக அரசு தரும் ஆதரவு மகத்தானது. தமிழர் கலாச்சாரம் காக்கும் அரசாக தமிழக அரசு காரியமாற்றி வருவது போற்றுதலுக்குரியது’’ என்றார்.


Tags : Jallikkattu ,Alankanallur , Alankanallur, jallikattu, Jallikattu 20222
× RELATED மண்டல பூஜை விழா