பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் உ.பி.யில் தனித்துப் போட்டி: கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து விலகியதாக தகவல்..!

லக்னோ: ஒன்றிய அரசிலும், பீகாரிலும் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி உத்தரப்பிரதேச தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஆளும் கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் அம்மாநிலத்தில் மட்டுமின்றி ஒன்றிய அரசிலும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் 5 மாநில தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் உத்தரப்பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகள் இடையே தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தொகுதி பங்கீட்டில் குழப்பமும் இழுபறியும் நீடித்து வந்தது.

ஐக்கிய ஜனதா தளம் கேட்ட தொகுதிகளை பாஜக ஒதுக்கவில்லை என்றும்  கூறப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்ட போது கூட்டணி கட்சிகளின் பட்டியலில் ஐக்கிய ஜனதா தளத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த உத்தரப்பிரதேச ஐக்கிய ஜனதா தள நிர்வாகம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது.

Related Stories: