×

தமிழகத்தில் சிறிது குறைந்த கொரோனா பாதிப்பு; 27 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழகத்தில் மேலும் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 29,39,923 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

* தமிழகத்தில் மேலும் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 29,39,923 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 12,484 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 27,60,458 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,989 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 11 பேரும், அரசு மருத்துவமனையில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 8987 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 6,43,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 5,95,48,455 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,40,720 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 1,42,476 ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 17,17,538 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 14,197 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 12,22,347 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 9,778 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 323 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 254.

* தமிழகத்தில் இதுவரை 231 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 231 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னை - 144, செங்கல்பட்டு -13, மதுரை- 11, திருவள்ளூர்- 6, திருச்சி 5, கோவை - 4, ராணிப்பேட்டை- 4, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் தலா 3, கன்னியாகுமரி - 4, தஞ்சை - 2, தூத்துக்குடி -6, சேலம், விழுப்புரம், விருதுநகர் தலா 2, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், நெல்லையில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Health Department , Slightly lower corona exposure in Tamil Nadu; No new casualties in 27 districts: Health Department report ..!
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...