×

சென்னையில் 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படுகிறது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதற்காக 1000 கோவிட் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் 200 வார்டுக்கு 1000 பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள் மற்றும் உணவுகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் நேரடியாக அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கி வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். சென்னை மாநகரில் தற்பொழுது கோவிட் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் கோவிட் தொற்று பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. எனவே, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களின் உத்தரவின்படி, ‘தொற்று பாதிப்பு அதிகமுள்ள மேற்குறிப்பிட்ட 7 மண்டலங்களில் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்காக கூடுதலாக வார்டிற்கு 5 களப்பணியாளர்கள் வீதம் 535 களப்பணியாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள 1000 கோவிட் களப் பணியாளர்களுடன் கூடுதலாக 535 களப்பணியாளர்களும் சேர்த்து தற்பொழுது 1535 களப்பணியாளர்கள் கோவிட் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Chennai , Corona impact is high in 7 zones in Chennai: Corporation information
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...