பொங்கலை முன்னிட்டு நெல்லை டவுனில் கபடி போட்டி

நெல்லை: பொங்கலை முன்னிட்டு நெல்லை டவுனில் பெண்களுக்கான கபடி போட்டி நடந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் நம் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலால் பொங்கல் பண்டிகை விழா கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் நெல்லையில் பல ஊர்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.

ஆண்டுதோறும் விவசாய நிலங்களில் பாடுபடும் விவசாயிகளுக்கு இந்த பொங்கல் விழாவின்போது நடத்தப்படும் கபடி உள்ளிட்ட நம் பாரம்பரிய வீர விளையாட்டுக்கள் ஆறுதலையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் நெல்லை டவுன் ரெங்கநாதபுரத்தில் ஊர் சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர் வரையுள்ள பெண்களுக்கான கபடி போட்டி ஊரடங்கு விதிமுறைகளின்படி பாதுகாப்பான முறையில் நடந்தது. இதில் பலரும் கலந்து கொண்டு கபடி உள்ளிட்ட நம் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்.

அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

Related Stories: