சீர்காழி அருகே மங்கை மடத்தில் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார கேடு: அப்புறப்படுத்த கோரிக்கை

சீர்காழி: சீர்காழி அருகே மங்கைமடத்தில் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதனை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடத்திலிருந்து திருவெண்காடு செல்லும் பிரதான சாலை மணிகர்ணகை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திய சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தனிநபர்கள் அபாயகரமான மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளையும் மூட்டை மூட்டையாக போட்டு செல்கின்றனர்.

இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களும்ஸ சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் தொற்று நோய் ஏற்படும் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு இவ்விடத்தில் குப்பைகள் கொட்ட கூடாது என ஊராட்சியின் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதனை மீறி குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் கொட்டியதால் தனிநபர்களும் அபாயகரமான குப்பைகளை, கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து குப்பைகள் கொட்ட கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருவதும் அதனை மீறி குப்பைகள் கொட்டப்படும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: