பெற்றோரை இழந்த மாணவர்களுடன் பொங்கல் கொண்டாடிய ஆசிரியை: மாவட்டம் கடந்த மனிதநேயம்

மன்னார்குடி:திருவாரூர் மாவட்டம்,கோட்டூர் ஒன்றியத்தில் உள்ளது பைங்காட்டூர் அரசு நடுநிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜாய்ஸ் (40). இவர் மன்னார்குடி அசேஷம் ஊராட்சியில் வசி த்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுக்காவில் உள்ள செய்யாறு கிராமத்தில் பெற்றோரை இழந்து தனது பாட்டியுடன் வாழும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஜெயசூர்யா, ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் டெண்டுல்கர் ஆகி யோரின் ஏழ்மை நிலையை பார்த்துள்ளார்.

அதனைக் கண்டு நெகிழ்ந்தவர், வரும் பொங்கலை அந்த மாணவர்களுடன் கொண்டாட வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதனை அவர் கணவரும், கா விரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவருமான தர்ம சுவாமிநாதனிடம் தெரிவித்து உள்ளார்.அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்து உள்ளார். பொங்கல் தினமான வெள்ளியன்று,தனது கணவர், குழந்தைகளுடன் திருவா ரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து, திருவண்ணா மலை மாவட்டம், வந்தவாசி தாலுக்கா, செய்யாறு கிராமத்தில் உள்ள பெற்றோரை இழந்த மாணவர்களின் இல்லத்திற்கு சென்று பொங்கலை அம் மாணவர்களுடன் கொண்டாடி உள்ளார்.

ஆசிரியை ஜாய்ஸின் மகள்களான மித்ரா, இனியா ஆகியோர் தங்களது உண்டியலில் சேர்த்து வைத்த ரூ.5 ஆயிரம் பணத்தை அந்த ஏழை மாணவர்களு க்கு வழங்கி உள்ளனர்.

மனிதநேயமிக்க செயல் புரிந்தமைக்காக ஆசிரியை ஜாய்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் கோட்டூர் வட்டாரப் பொறுப்பாளர்கள் நேரில் சென்று வாழ் த்து தெரிவித்தனர்.இதுகுறித்து கோட்டூர் வட்டாரத் தலைவர் தங்கபாபு கூறுகையில், .வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் எனும் வள்ளலாரின் வரி களை அவ்வப்போது நினைவூட்டவே செய்கிறார்கள் ஆசிரியை ஜாய்ஸ் போன்ற ஒரு சிலர் என்றார்.

Related Stories: