ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்

கான்பெரா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் ரூ.405 கோடி பரிசுத்தொகை கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை அதிகாலை 5.30க்கு தொடங்குகிறது. 2வது முறையாக விசா ரத்து செய்யப்பட்டதால் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால், அலெக்ஸ்சாண்டர், ஸ்வெரவ், சிட்சிபாஸ், மெத்வதேவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா, ஆஸ்லி பார்ட்டி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றால் ரூ.23.75 கோடியும், 2வது இடம் பிடித்தால் ரூ.11.75 கோடியும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: