பக்கத்து வீட்டுக்காரரால் என் மானமே போகுது... நீதிமன்றத்தில் நடிகர் சல்மான் கான் வழக்கு

மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு நவிமும்பை  அருகேயுள்ள பன்வெலில் பண்ணை வீடு உள்ளது. இதற்கு பக்கத்தில் கேதன்  ககாட் என்பவரின் வீடு உள்ளது. இவர் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் எதிராக ஆதாரமற்ற, களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய தவறான செய்திகளை சமூக வலைத்தளங்கள்,  டிவிட்டர்கள், வீடியோக்கள் போன்றவை மூலம் பரப்பி வருவதாக சல்மான் கான்  குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சல்மான், இது போன்ற  உண்மைக்கு மாறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேதானுக்கு தடை விதிக்கும்படி கோரியுள்ளார். இந்த  வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு  சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தங்களுக்கு தாமதமாக கிடைத்ததாகவும், எனவே  பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என்றும் கேதானின் வழக்கறிஞர்கள் கோரினர். இதை ஏற்றுக்கொண்ட  நீதிபதி அனில் லட்டாட், விசாரணையை 21ம் தேதிக்க ஒத்திவைத்தார்.

Related Stories: