படோசா சாம்பியன்

சிட்னி, : ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி டென்னிஸ் கிளாசிக் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் (4வது ரேங்க், 26 வயது) நேற்று மோதிய படோசா (9வது ரேங்க், 24 வயது) 6-3, 4-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 2 மணி, 22 நிமிடம் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார். ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸி. ஓபன் மெல்போர்னில் நாளை தொடங்க உள்ள நிலையில், சிட்னி தொடரில் பட்டம் வென்றது படோசாவுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Related Stories: