உபி சட்டபேரவை தேர்தலில் ‘பிகினி’ நடிகை

உபி சட்டபேரவை தேர்தலில் ஹஸ்தினாப்பூர் தொகுதியில், அர்ச்சனா கவுதம் என்ற நடிகையை வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. அழகி போட்டியில் வெற்றி பெற்ற அர்ச்சனா, பிகினி உடை அணிந்து நிற்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. உபி மாநில பாஜ செய்தி தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறுகையில், ‘வேட்பாளர்கள் கிடைக்காமல் காங்கிரஸ் திண்டாடுகிறது. மலிவான விளம்பரங்கள் மற்றும் தலைப்பு செய்திகளுக்காக  இத்தகைய வேட்பாளரை அக்கட்சி நிறுத்துகிறது,’ என தெரிவித்தார்.

காங். செய்தி தொடர்பாளர் அசோக் சிங் கூறுகையில், ‘நடிகைகள் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது? பாஜ.விலும் நடிகைகள் பலர் இருக்கின்றனர். அதில் ஒருவர்  அமைச்சராகவும் உள்ளார். இதில், எங்கள் மீது குறை கூறுவது, பாஜ.வின் மோசமான மனநிலையையே காட்டுகிறது,’ என்றார்.

Related Stories: