பைக் மீது வேன் மோதி 3 வாலிபர்கள் உயிரிழப்பு

நல்லம்பள்ளி : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (29). எம்.எட்., படித்துவிட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் திருஞானம்(26), பூபேஷ்(30) ஆகியோருடன், நேற்று முன்தினம் மாலை டூவீலரில் பாளையம்புதூருக்கு சென்று கொண்டிருந்தார். டூவீலரை பூபேஷ் ஓட்டி சென்றார். பாளையம்புதூர் 4 ரோடு பகுதியை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து சேலம் சென்ற சரக்கு வேன், டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பெருமாள் சம்பவ இடத்தில் மற்ற 2 பேரும் மருத்துவமனையில் இறந்தனர்.

Related Stories: