புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா

புதுச்சேரி :புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஆயிரம் பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 12ம் தேதி தலைமை செயலர் அஸ்வனிகுமாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

 

இந்நிலையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடந்த 12ம் தேதி காந்தி நகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரே இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து, 13ம் தேதி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் நேற்று கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

 இதையடுத்து, அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நான் இன்று (நேற்று) கொரோனா பரிசோதனை செய்ததில், லேசான அறிகுறியுடன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள், என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: