181வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் சிலைக்கு அரசு மரியாதை

கூடலூர் :  பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக்கின் 181வது பிறந்த நாளை முன்னிட்டு, கூடலூர் அருகே உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பெரியாறு அணையைக் கட்டி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக்கின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜன.15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தென் தமிழக மக்கள் பொங்கல் விழாவோடு பென்னிகுக்கின் பிறந்தநாள் விழாவையும் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019 முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

பென்னிகுக்கின் 181வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம், கூடலூர் அருகே, லோயர்கேம்பில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், தேனி கலெக்டர் முரளீதரன், மாவட்ட திமுக பொறுப்பாளர்கள்(தெற்கு) கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ, தங்கத்தமிழ்செல்வன் (வடக்கு) மற்றும் எம்எல்ஏக்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார் கலந்து கொண்டு பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்,  முன்னாள் அமைச்சர் உதயகுமார்  உள்ளிட்டோர், மதிமுக சார்பில் மாவட்டச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், அக்கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினர், விவசாய அமைப்பினர், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

Related Stories: