அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேத்தி எழுதிய ஆங்கில நூலை முதல்வர் வெளியிட்டார்

சென்னை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேத்தி எழுதிய ஆங்கில நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பேத்தி 8 வயது சிறுமி மகிழினி இளஞ்செழியன் எழுதிய ‘The Adventures of Shing and Shang in Mystery Island’ என்ற ஆங்கில நூலின் முதல் பிரதியை வெளியிட்டார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், ராஜகண்ணப்பன், சேகர்பாபு, மனோ தங்கராஜ், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள், மாநில கல்லூரி முதல்வர், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: